MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI.
URL: http://www.mcon.ac.in/
Reporter - கு.ஆனந்தராஜ்
ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட மனுவுக்கு அந்த விபத்தில் கைகள் நசுங்கின. கைமாற்று அறுவைசிகிச்சைக்குச் சென்ற மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய ஸ்ரீஜா, வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை மனுவுக்குப் புரிய வைத்திருக்கிறார். சிகிச்சை முடிவில் மனுவுக்குக் கைகளுடன் காதலும் கூடியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த இவர்கள் தற்போது ஆதர்ச தம்பதியர். தங்கள் காதல் திருமண வாழ்க்கையைப் பகிரும் இருவரின் முகங்களிலும் அன்பு ஆர்ப்பரிக்கிறது.
“டிப்ளோமா முடிச்சுட்டு தனியார் வேலையில் இருந்தேன். 2013-ல் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரயில்ல போயிட்டிருந்தேன். நான் பயணிச்ச பெட்டியில சில இளைஞர்கள் சிகரெட் பிடிச்சுட்டிருந்தாங்க. ‘ஓடுற ரயில்ல புகை பிடிக்கிறது ஆபத்தானது’ன்னு நான் உட்பட பயணிகள் பலரும் பலமுறை சொன்னோம். அந்த இளைஞர்கள் கண்டுக்கவேயில்லை. ரயில்வே போலீஸார் கிட்ட புகார் செய்தேன். அது அந்த இளைஞர்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. நள்ளிரவு 1 மணி. நான் படிக்கட்டுப் பக்கம் வந்தபோது ரயிலில் இருந்து என்னைத் தள்ளிவிட்டுட்டாங்க. சக்கரங்கள் ஏறியதால் கைகள் நசுங்கி, கால்கள் உடைந்த நிலையில் அடர்ந்த காட்டுக்குள் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராட்டிருந்தேன். அந்த வழியே வந்த மீனவர்கள், போலீஸுக்கு தகவல் தெரிவிக்க உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். சில தினங்களுக்குப் பின்னர் கண் முழிச்சேன். ரெண்டு கைகளும் துண்டிக்கப்பட்டதை உணர்ந்து துடிச்சேன். தற்கொலையைக்கூட சுயமா செய்துக்க முடியாத நிலை. ஆறு மாச சிகிச்சைக்குப் பிறகு, வீடு திரும்பினேன். வாழ்க்கை மீதான பிடிப்பே இல்லாமதான் இருந்தேன்”. #love
#lovestory #Romantic #inspiration